வீடுகளிலேயே காய்கறிகள், பழங்களை சாகுபடி செய்வதற்கான, ‘வீட்டுத்தோட்டம்’ எனும் திட்டத்தை, தோட்டக்கலைத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள், 50 சதவிகித மானியத்தில் 450 ரூபாய்க்கு வழங்கப்படும். தோட்டக்கலைத்துறையின் மானியம் பெறுவதற்காக, https://tnhorticulture.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் 6 செடி வளர்ப்பு பைகள், இரண்டு கிலோ தென்னைநார் கழிவு கட்டி, 6 வகையான காய்கறிகள் விதைகள், நுண்ணூட்ட சத்துக்கள், இயற்கை உரம், வேப்ப எண்ணெய் உள்ளிட்டவை இடம்பெறும்.
இதேபோல, பழச்செடிகள் வளர்ப்புத் திட்டத்திற்கும் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம். இந்தத் திட்டத்தில், 250 ரூபாய் மதிப்புள்ள மா, கொய்யா, நெல்லி, பலா, சீத்தா, எலுமிச்சை, சப்போட்டா ஆகிய ஐந்து வகையான பழச்செடிகள் 50 ரூபாய்க்கு வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, பயனாளிகள் தங்களது புகைப்படம், ஆதார் கார்டு ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். தோட்டக்கலைப் பண்ணைகள் மற்றும் அலுவலகங்களில் இடுபொருட்கள் வழங்கப்படும்.