உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, பல்வேறு நாடுகளில் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை நிலவியது. இந்நிலையில் உணவுப் பற்றாக்குறையால் தவித்து வரும் 18 நாடுகளுக்கு தினை மற்றும் 18 லட்சம் டன் கோதுமை உள்ளிட்ட தானியங்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. இதை சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியத்தின் தலைவர் அல்வாரோ லாரியா பாராட்டி உள்ளார்.
உக்ரைன் போர் மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுத்தது. இந்த நேரத்தில் தினை உள்ளிட்ட பொருட்களை வழங்கி இந்தியா உதவியது பாராட்டுக்கு உரியது. தினை வகைகளின் மறுமலர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜி.20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை பெற்றுள்ள இந்தியா, உலக நாடுகளின் உணவு முறைகளை மாற்றி அமைக்கும் திறனைப் பெற்றுள்ளது” என்றார்.