தோட்டக்கலைத்துறை வாயிலாக, 3 கோடி நாட்டு ரக காய்கறி செடிகள், பழ மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. நடப்பாண்டு, 20 கோடி செடிகள் மற்றும் கன்றுகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது, 3 கோடி செடிகள் மற்றும் கன்றுகள் தயார் நிலையில் இருக்கிறது. தென்மேற்கு பருவ மழை காலத்தில் ஆடிப்பட்டத்தில் நடவு செய்வதற்காக கன்றுகளை விநியோகம் செய்ய தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது. தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி, புடலை, பீர்க்கன், சுரைக்காய், கொத்தவரை, காராமனி, அவரை உள்ளிட்ட நாட்டு காய்கறி செடிகள், வாழை, கொய்யா, சப்போட்டா, சீதா, பலா, மா உள்ளிட்ட பழமரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளன.