Online News Portal on Agriculture

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மக்களுக்கு சுருள்பாசி வளர்ப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி

0 23

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மக்களுக்கு சுருள்பாசி வளர்ப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி அண்மையில்  திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் நடை பெற்றது.

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவியுடன் திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி தாவரவியல் துறை நடத்திய பயிற்சியில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி முனைவர் அ.கா. கஜா நசீமுதீன், ஹாஜி. எம் ஜே ஜமால் முகமது, பொருளாளர், முனைவர் க அப்துஸ் சமத், உதவி செயலாளர், முனைவர் கா.ந. அப்துல் காதர் நிஹால், உறுப்பினர் மற்றும் கவுரவ இயக்குநர் முன்னிலையில் சிறப்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் து.இ.ஜார்ஜ் அமலரேத்தினம், விழாவிற்கு தலைமை தாங்கினார்

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிர் துறை பேராசிரியர் மற்றும் நுண்ணுயிரிகளுக்கான தேசிய களஞ்சியத்தின் இயக்குநர் டாக்டர் ஜி. முரளிதரன், சுருள்பாசி சாகுபடி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். தூத்துக்குடியை சேர்ந்த சுருள்பாசி சாகுபடி பயிற்சியாளர் திரு. சு. குருசாமி அவர்கள் சுருள்பாசி சாகுபடி மற்றும் அறுவடை முறைகளை செய்முறை பயிற்சி மூலம் விளக்கினார். ஜமால் முகமது கல்லூரியின் தாவரவியல் உதவி பேராசிரியர் முனைவர் கா. முகமது ரபி மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் உதவி பேராசிரியர் முனைவர் வி. கவிதா அவர்கள் ஸ்குவாஷ், பிஸ்கட்டுகள், கேக்குகள் மற்றும் சோப்புகள் போன்ற சுருள்பாசி மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

கிரியா அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் கே. சி சிவபாலன், சுருள்பாசி தொழில் செய்ய அரசு தரும் மானியங்கள் குறித்து விளக்கினார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மேலாண்மைத் துறையின் பேராசிரியர் முனைவர் என். டி. ஸ்ரீநிதிவிஹாஷினி அவர்கள் பெண்கள் தொழில் முனைவோரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தாவரவியல் துறையின் தலைவர் முனைவர் உ. சையத் ஜஹாங்கிர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளரும் தாவரவியல் உதவி பேராசிரியருமான முனைவர் கா. முகமது ரபி ஆகியோர் சுருள்பாசி சாகுபடி தொழில் நுட்பங்கள்,மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் மற்றும் வணிக வாய்ப்புகள் குறித்து பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட பெண்கள் கூறும் போது, மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி மிகவும் பயனுள்ளததாக இருந்தது என்றும் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்க்கு இந்த பயிற்சி உதவும் என்றும் தெரிவித்தனர். பயிற்சியில் 50 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்

Leave A Reply

Your email address will not be published.