மூலிகை மருத்துவத்தில், கோழி கழிச்சல் கட்டுப்படுத்துவது குறித்து பேசிய செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் கால்நடை மருத்துவ பல்கலை உதவிப்பேராசிரியர் துரைராஜன், ” வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு, நுண்ணுயிரி, நச்சுயிரி மற்றும் பூஞ்சை காளான் தொற்று ஏற்படும். இதனால், கோழிகளுக்கு கழிச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறக்க நேரிடும்.
தீவனத்தில் ஏற்படும் மாற்றம், கரையான், பூச்சிகளை சாப்பிடுவதால், சில நேரங்களில் கழிச்சல் ஏற்படும். இதை மூலிகை மருத்துவத்தில் கட்டுப்படுத்தலாம். சீரகம் 10 கிராம், கசகசா, மிளகு, வெந்தயம், மஞ்சள், பெருங்காயம் ஆகியவை தலா 5 கிராம் எடுத்து இடித்து, இதனுடன் தேவையான அளவு கடுகு வறுத்துக்கொள்ள வேண்டும். பூண்டு, வெங்காயம் தலா 5 பல் எடுத்து, அரைத்து கொள்ள வேண்டும். இரு கலவையையும், கோழி தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு கழிச்சல் நோய் கட்டுப்படுத்தப்படும்” என்றார்.