தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் பேஸ் 4 செயல்படுத்தப்பட உள்ளது. பயன்பெற உள்ள விவசாயிகள், ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனைமலை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், நடப்பாண்டில் தமிழக பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் பேஸ் 4 செயல்படுத்தப்பட உள்ளது. தோட்டக்கலைத்துறை வாயிலாக, நீர் பாசனத்தில் புதிய திட்ட உத்திகளை செலுத்தி, விவசாயிகளின் வருவாயை பெருக்கி உதவும் புதிய பயிர்கள் மற்றும் ரகங்கள் அறிமுகம் செய்து, வேளாண்மையை நவீனப்படுத்தி கொண்டுள்ளது.
இத்திட்டத்தில், ஆழியாறு பழைய ஆயக்கட்டு கிராமங்களான மார்ச்சநாயக்கன்பாளையம், பெரியபோது, ஒடையகுளம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், காளியாபுரம், கோட்டூர், சோமந்துரை மற்றும் தென்சங்கம்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கிராமங்களில் பிரதான பயிரான தென்னையில், ஊடுபயிராக ஜாதிக்காய், திசுவாழை வழங்கப்பட உள்ளது.
மிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் பேஸ் 4 ஆனைமலை வட்டாரத்தில் செயல்படுத்த, 57.41 லட்சம் ஹெக்டேர் இலக்கு பெறப்பட்டு விவசாயிகளுக்கு அளிக்கப்பட உள்ளது. திசுவாழை 72 ஹெக்டேர், ஜாதிக்காய் 65 ஹெக்டேரும் நுண்ணீர் பாசன திட்டம், 24 ஹெக்டேரிலும் செயல்படுத்தப்பட உள்ளது. நிலப்போர்வைக்கு 4 ஹெக்டேரும் பெறப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி, தோட்டக்கலைத்துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில், பயன்பெற உள்ள விவசாயிகள், சிட்டா அடங்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல் மற்றும் உரிமைச்சான்றுடன் தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், ‘உழவன் செயலி’ வாயிலாக, முன்பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் 98659 05505, உதவி தோட்டக்கலை அலுவலர் ராம் பிரசாத் 70106 81662, உதவி தோட்டக்கலை அலுவலர் பிரித்தா 73958 55683 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.