Online News Portal on Agriculture

மகசூல் அதிகரிக்கும் மா கவாத்து…

0 57

 

மா மரங்களில் கூடுதல் விளைச்சல் பெற செப்டம்பரில் கிளை மேலாண்மை செய்ய வேண்டும் என மதுரை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ரேவதி தெரிவித்துள்ளார்.

கொட்டாம்பட்டி, மேலூர், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சேடப்பட்டி மற்றும் இதர பகுதிகளில் 5600 எக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு 45 ஆயிரம் டன் காய்கள் உற்பத்தியாகிறது. கூடுதல் விளைச்சல் பெற நிலத்தோடு வளரும் கிளைகள், ஒன்றுடன் ஒன்று ஒட்டி வளரும் கிளைகள், குறுக்கும் நெடுக்குமான கிளைகளை அகற்ற வேண்டும். இதன் மூலம் மரத்திற்கு சூரிய ஒளி, காற்றோட்டம் கிடைக்கும். தழை, மணி, சாம்பல் சத்துகளை 30:60:60 என்ற அளவில் கவாத்து செய்த பின் நவம்பரில் ஒருமுறையும் ஜூனில் 10 கிலோ மட்கிய தொழு உரத்துடன் சேர்த்து நீர் பாய்ச்ச வேண்டும். இதன்மூலம் ஜனவரி, பிப்ரவரியில் நிறைய பூத்து ஏப்ரல், மே மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.