Online News Portal on Agriculture

மரம் தங்கசாமி நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்றுகள் நடு விழா

 திருச்சியில் நடைபெற்றது

0 24

மரம் தங்கசாமி நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்றுகள் நடு விழா


செப் 24. திருச்சி. மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு நாள் செப்டம்பர் 16 அன்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக அவரது நினைவு நாளில், தமிழகத்தில் 37 மாவட்டங்களில், 86 விவசாய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, 691 ஏக்கரில் மொத்தம் 1,67,828 மரக்கன்றுகள் நடப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 1.12 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மரங்கள் வளர்ப்பதின் முன்மாதிரியாக திகழ்ந்தவர் திரு. மரம் தங்கசாமி ஐயா அவர்கள். “வாழ்வோம் மரங்களுடன்” என்ற தாரக மந்திரத்துடன் டிம்பர் மர சாகுபடியை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தியவர். மரம் சார்ந்த விவசாயம் என்பது காலத்தின் கட்டாயம் என விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி மாவட்டத்தையே ஒரு பசுஞ்சோலையாக மாற்றியவர். ஈஷாவின் ஆரம்பகால இயக்கமான பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து செயல்புரிந்தவர்.மரம் தங்கசாமி அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு பக்கபலமாக காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஈஷா சார்பாக இதுவரை விவசாயிகளுக்கு 11 கோடி மரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ,திருச்சி மாவட்டதில் மரம் தங்கசாமி நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடு விழா , சரஸ்வதி உணவக உரிமையாளர் கெளரி ஷங்கர் அவர்களின் முன்னிலையில்  திருச்சி  உழவர் சந்தை அருகில் நடைபயிற்சி பகுதியில் நடைபெற்றது.விழாவில் பொது மக்கள் , மாணவர்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.