Online News Portal on Agriculture

மர முருங்கை சாகுபடிக்கு மானியம்…

0 37

மடத்துக்குளம் வட்டாரத்தில் தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரி, மிளகாய் என பல்வேறு காய்கறி சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையில், மர முருங்கை சாகுபடிக்கு மடத்துக்குளம் வட்டாரத்திற்கு, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சுரேஷ்குமார், “ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் மதிப்பில், அரசு தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தரமான பல ஆண்டுகள் வளரக்கூடிய முருங்கை பதியன்கள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேர் பரப்புக்கும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இரண்டு ஹெக்டேர் பரப்பளவிலும் வழங்கப்படுகிறது.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட, தாந்தோணி, மெட்ராத்தி கிராமங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மர முருங்கையில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில உரிமைச் சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் 96598 38787, நித்யராஜ் 63821 29721 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.