Online News Portal on Agriculture

மாடுகளுக்கு சினை பிடிக்கவில்லையா? என்ன காரணம்?

0 35

 

கோவை மாவட்டத்தில் கறவை மாடுகளுக்கு சினை பிடிக்க காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்க தலைவர் செல்வராஜ், கலெக்டர் கிராந்திகுமாரிடம் அளித்த மனுவில், “மாடுகளுக்கு சினை ஊசி மூலம் கருத்தரிப்பது சமீபகாலமாக காலதாமதம் ஏற்படுகிறது. ஜெர்சி மற்றும் எச்.எப் வகை மாடுகள் வருடக்கணக்கில் சினை பிடிப்பதில்லை. இவ்வகை மாடுகளுக்கு தாது உப்பு தேவைப்படுகிறது. கருத்தரிப்பு ஊசிகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். கருத்தரிப்பு ஊசிகளை கையாள வேண்டிய நடைமுறையை தெளிவுபடுத்த வேண்டும். மாடுகள் விரைவில் சினை பிடிக்க என்ன செய்ய வேண்டும். வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் தாது உப்பு கிடைக்கச் செய்ய வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

“அரசு வழிகாட்டுதல்படி, சராசரியாக, 26 கருவூட்டல் மேற்கொள்ளும்போது, மாடுகள் சினையுற வேண்டும். இல்லையெனில், உரிய பரிசோதனை செய்து, காரணிகளை கண்டறிந்து தீர்வு ஏற்படுத்தி, சினையுறச் செய்ய வேண்டும்.

சினை ஊசிகளை உரிய முறையில் கையாள வேண்டுமென, களப்பணியாளர்கள் மற்றும் டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேர்மறை உடல்வாகு கொண்ட கால்நடைகள், சினையுறுவதில் தாமதம் ஏற்படாது. பசுந்தீவனம் பற்றாக்குறை, ஹார்மோன் சமச்சீரற்ற தன்மை, மரபியல் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடும் கர்ப்பப்பை நோய் தாக்கம், பாக்டீரியா வைரஸ் மற்றும் ஒட்டுண்ணி தாக்கம், அந்தந்த பகுதிகளில் உள்ள குடிநீரின் தன்மை, கோமாரி நோய், கருச்சிதைவு நோய்த்தாக்கம் கொண்ட கால்நடைகள் சினை பிடிப்பதில் காலதாமதம் ஏற்படலாம். குடிநீர் மற்றும் தீவனத்தை ஆய்வுக்கு உட்படுத்தி, குறைகளை களைந்து, கால்நடைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி, நோய் தாக்குதலோ, ஊட்டச்சத்து குறைபாடோ இருப்பின், அவற்றை சரி செய்தால், சினை பிடிப்பதில் காலதாமதம் தவிர்க்கலாம்.

தீவனம் மற்றும் மண் பகுப்பாய்வு மூலம், நுண்ணூட்டச்சத்து குறைபாடு அறியப்பட்டு, அதற்கேற்ப தாது உப்புகள், கால்நடை மருத்துவ நிலையம் மூலம் வினியோகிக்கப்படுகிறது” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.