Online News Portal on Agriculture

விரைவில் அதிக இனிப்பு தன்மை கொண்ட புதிய பன்னீர் திராட்சை அறிமுகம்

-ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்பையா

0 49

ஆண்டு முழுவதும் திராட்சை கிடைக்கும் பகுதி என்ற பெருமையை தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெற்றுள்ளது. காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, அணைப்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் பன்னீர் திராட்சை சாகுபடியாகிறது. பன்னீர் திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல், இனிப்பு தன்மை குறைவாக இருப்பது பிரச்சனையாக இருந்தது. இப்பிரச்சனையை தவிர்க்க ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம், பன்னீர் திராட்சையில் மேம்படுத்தப்பட்ட ரகம் ஒன்றை அறிமுகம் செய்ய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதன் விளைவாக தற்போது புதிய ரக பன்னீர் திராட்சை தயார் நிலையில் உள்ளது.

இது தொடர்பாக பேசிய ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்பையா “பன்னீர் திராட்சையில் மட்டும் 14 ரகங்கள் உள்ளன. தற்போது அதில் ஐந்தாவது ரகத்தை ஆராய்ச்சி செய்து புதிய மேம்படுத்தப்பட்ட ரகம் ஒன்றை கண்டறிந்துள்ளோம். அதற்கு தேனி திராட்சை கலெக்‌ஷன் 126 (Theni Grapes collection 126) சுருக்கமாக ‘சி.ஜி.சி., 126’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது உள்ள ரக திராட்சை கோடை காலத்தில் கவாத்து அடித்தால், மகசூல் குறையும். புதிய ரகத்தில் மகசூல் குறையாது. பனிகாலத்தில் கவாத்து அடித்து, கோடையில் அறுவடை செய்தால் இனிப்பு தன்மை 22 முதல் 26 பிரிக்ஸ் வரை கிடைக்கும். ஆனால் தற்போதுள்ள ரகத்தில் இனிப்பு தன்மை 18 முதல் 20 பிரிக்ஸ் மட்டுமே உள்ளது. அத்துடன் ஆண்டு முழுவதும் ஒரே சீரான மகசூல் கிடைக்கும். செவட்டை நோயை தாங்கி வளரக்கூடியது. விரைவில் இந்த ரகம் அறிமுகம் செய்யப்படும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.