Online News Portal on Agriculture

ஆரோக்கியம் காக்கும் சிறுதானியங்கள்

0 3

ஆரோக்கியம் காக்கும் சிறுதானியங்கள்

ஜனவரி 10, 2025

கட்டுரையாளர் முனைவர் எஸ். நித்திலா  

இணை பேராசிரியர் பயிர் வினையியல் மகளீர் தோட்டக்கலை கல்லூரி , திருச்சி

ஆரோக்கியம் காக்கும் சிறுதானியங்கள்

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப  உணவு உற்பத்தியை அதிகரிப்பது அவசியம். .கடந்த காலத்தில் நவீன வேளாண்மை தொழில் நுட்பங்கள் மூலம் வேளாண்மை உற்பத்தி அதிகரித்திருந்தாலும் தற்போது ஊட்ட சத்து பாதுகாப்பு குறித்து  கவனம் செலுத்த வேண்டிய நிலையில்  உள்ளோம். காரணம் உலகளவில் 795 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர்.ஊட்டக்குறை அல்லது ஊட்டச்சத்துக்குறைபாடு (Malnutrition) என்பது சமநிலையற்ற உணவு (சில ஊட்டச்சத்துக்களைப் பற்றாக்குறையுடனோ, அளவுக்கு அதிகமாகவோ, தவறான விகிதாச்சாரத்திலோ) உட்கொள்ளுவதால் ஏற்படும் நிலைமையைக் குறிக்கிறது உலக மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர்  பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு நாளும் 811 மில்லியன் மக்கள் உணவின்றி  பட்டினி கிடக்கின்றனர். கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பின் 2019 முதல் 2020 வரை, 161 மில்லியன்  மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்                 இந்திய உணவு உற்பத்தி சூழ்நிலை (2019-20) பொறுத்த வரை விவசாய உற்பத்தி 308 மில்லியன் டன்களாகவும் தோட்டக்கலை உற்பத்தி 327 மில்லியன் டன்களாகவும் இருந்தது. தோட்டக்கலை பயிர் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்தாலும் கூட ஊட்டச்சத்து பிரச்சனை கவலை அளிக்கும் சூழலில் உள்ளது.இந்தியாவின் மக்கள்தொகையில் 15.3 சதவீதம் பேர் (190 மில்லியன் ). ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் .ஏறக்குறைய 17.3 சதவீத குழந்தைகள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை போதிய     உடல்  எடை   இல்லாமல் .உள்ளனர் .மேலும் 5 வயதுக்குட்பட்ட 30.9 சதவீதம் குழந்தைகள்  வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். இனப்பெருக்க வயதான  15-49 வயது பெண்களில்  53 சதவீதம் பேர் இரத்த சோகையால் அவதிப்படுகின்றனர் ( உலகில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை 2021).இந்தியாவில் ஐந்து வயதுக்குக் குறைவான 38% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் உயிரிழக்கும் குழந்தைகளில் பாதிப்பேர் ஊட்டச்சத்து போதாமை, வளர்ச்சிக் குறைபாடு ஆகிய காரணங்களால் மடிவதாக யுனிசெஃப் கூறுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மூளைவளர்ச்சி தடைபடும்; படிப்புத் திறன் குறையும், பள்ளியில் செயல்திறன் சிறப்பாக இருக்காது, வேலையில் இருந்தால் பணி  திறன் கணிசமாகக் குறையும். அதுமட்டுமல்லாது ஊட்டச்சத்துடன் தொடர்புடைய நோய்களான நீரிழிவு, உடல்பருமன் ஆகியவற்றுக்கும் வழிவகுக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

ஆரோக்கியத்தை அள்ளி  தரும் சிறுதானியங்கள்

கடந்த காலத்தில் வாழ்வியல் மற்றும் உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட மாற்றம், பல்வேறு நோய்களை மனித சமூகம் சந்திக்க காரணமாய் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது . ஊட்டசத்து குறைபாட்டை சரி செய்ய  கை  கொடுப்பது சிறு தானியங்கள் ஆகும். ராகி கம்பு சோளம் மக்கா  சோளம் ஆகிய சிறு தானியங்கள் எனவும் வரகு சாமை குதிரை வாலி பனி வரகு குறு தானியங்கள் எனவும் இரு வகையாகவும்  பிரிக்கலாம். அனைத்து சிறுதானியங்களை ஒன்று சேர்த்து ஸ்ரீ அன்னா என அழைக்கப்படுகின்றன. நம் முன்னோர் நோயின்றி அதிக நாள் வாழ உதவியதும் இந்த சிறுதானியங்கள் தான். பெயர் தான் சிறுதானியம். ஆனால் அவற்றில் உள்ள ஆரோக்கிய சத்துக்களின்  பட்டியல் பெரிது. இது ஊட்டச்சத்து நிறைந்தது, சுவையில் சிறப்பு, நார்ச்சத்து அதிகம், உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும், வாழ்க்கைமுறை தொடர்பான நோய்களைத் தடுக்க உதவுகிறது. உடல் நாம் சாப்பிடும் அரிசியை விட அதிக ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் உள்ளன. நார் சத்து வைட்டமின் சத்து உள்ளதால் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சரிசகித உணவாக விளங்குகிறது தொடர்ச்சியாக சாப்பிடும் போது சக்கரை நோய் , குடல் புண், ரத்த அழுத்தம்  போன்ற நாள்பட்ட நோய்களுக்கு   மருந்தாகிறது உடல் பருமனைக் குறைப்பதாகட்டும், நீரிழிவாகட்டும், உயர் இரத்த அழுத்தமோ, இருதயம் தொடர்பான நோய்கள் அபாயமாகட்டும், இவற்றைக் குறைக்கிறது. இதோடு கூடவே, வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது

இலாபத்தை அள்ளி  தரும் சிறுதானிய சாகுபடி

சிறுதானியங்கள் என்பவை பண்டைய காலம் தொட்டே நமது விவசாயம், கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றின் அங்கமாக இருந்து வருகின்றன.  சிறுதானியங்கள் சாகுபடி  விவசாயிகளுக்கும் அதிக இலாபகரமானது. அதுவும் அதிக முதலீடு செய்ய இயலாத சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி  சிறந்த வாய்ப்பாகும் .  மிகக் குறைந்த நேரத்தில் அறுவடைக்கு தயார் ஆவதுடன் , தண்ணீர் தேவையும் அதிகம் இருக்காது. நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு சிறுதானியங்கள் சிறந்த பயிர் தேர்வாகும். இரசாயனங்கள் இன்றி இயற்கை முறையில் சிறுதானியங்களைப் பயிரிடலாம் அதன் மூலம் மனிதர்கள் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்  சிறுதானியங்களின் காய்ந்த தழைகள் மிகச் சிறப்பான தீவனமாகவும் கருதப்படுகிறது. அதிகரித்து வரும் பருவ நிலை மாற்ற சூழலில் சிறுதானியங்களை வறட்சியான இடங்களில் மண் வளம் குறைவாக உள்ள இடங்களில் கூட சாகுபடி செய்ய முடியும்

ஏறக்குறைய  2.5 கோடி விவசாயிகள் சிறுதானிய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு சிறுதானிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது  மட்டுமல்லாது சாகுபடி தொடங்கி மதிப்பு கூட்டுவது  சந்தைப்படுத்துவது வரை வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது . இந்தியாவில்  வெவ்வேறு மாநிலங்களில்  சிறுதானியங்கள் முதன்மைப் பயிராகப் பயிரிடப்படுகிறது. “ஒரு மாவட்டம், ஒரு விளைபொருள்” திட்டத்தின் கீழ் நாட்டின் 19 மாவட்டங்களில் சிறுதானியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. “இந்தியாவின் சிறுதானியங்கள் இயக்கம் ஸ்ரீ அன்னாவுக்கான பிரச்சாரம்’  என்பது நாட்டின் சிறுதானிய விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

சிறுதானியங்கள் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் ஒரு சில நன்மைக கள்

சிறுதானியங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, கனிமச்சத்து ஆகியன அதிக  அளவில் உள்ள            காரணத்தால் சிறுதானியங்களை சூப்பர் உணவு என்று அழைக்கப்படுகிறது சிறுதானியங்களில் கஞ்சி, கூழ், களி, தோசை, பொங்கல், அடை, பிரியாணி, கொழுக்கட்டை, இனிப்பு, கார பலகாரங்கள் போன்ற பல சுவையான, ஆரோக்கியம் பெருக்கும் உணவுகளைத் தயாரிக்கலாம் .சிறுதானியங்களில்  கால்சியம் இரும்பு பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் உள்ளன. உமி தவிடு நீக்க அவசியம் இல்லை என்பதால் சத்துக்கள் அப்படியே உடம்பிற்கு கிடைக்கும்  சிறுதானியங்களில் க்ளுட்டன் சத்து கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளதால் சக்கரை நோய்க்கு  ஏற்றது சிலர் சிறுதானிய குக்கீஸ், சிறுதானிய பேன் கேக்குகள், சிறுதானிய தோசை கூடத் தயாரிக்கிறார்கள். அதே போல, சிறுதானிய சக்தி வில்லைகளும், சிறுதானிய காலை உணவும் தயார் செய்யப்பட்டு வருகின்றது.

இனிவரும் காலங்களில் எடுக்க வேண்டிய   நடவடிக்கைகள்

தற்பொழுது இந்தியாவின் தேசிய உணவுஉற்பத்தியில்  ஸ்ரீ அன்னாவின் பங்களிப்பு 5-6 சதவிகிதம் மட்டுமே . இந்த பங்களிப்பை அதிகரிக்க விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் துறை வல்லுநர்கள் ஆராய்ச்சிகளை  வேண்டும் சிறுதானியப் பொருட்களைத் தயாரிப்பதற்கு  பல மாநிலங்கள் தங்கள் பொது விநியோக திட்டத்தில்  அம ஸ்ரீ அன்னாவை சேர்த்துள்ளன . இதே போன்ற திட்டத்தை  மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும், மேலும்  குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் வழங்கப்படும்  காலை மற்றும்  மதிய உணவில் ஸ்ரீ அன்னாவை  சேர்க்க வேண்டும் .

தொடர் முன்னெடுப்புகள் மூலம் ஒரு நபர் ஒரு மாதத்திற்கு எடுத்துக் கொண்ட சிறுதானியங்கள் 3 கிலோகிராமுக்கு மிகாமல் இருந்தது, இன்று அதே நுகர்வு 14 கிலோவாக அதிகரித்துள்ளது  சிறுதானியங்கள் உணவுப் பொருட்களின் விற்பனையும் ஏறக்குறைய 30% அதிகரித்துள்ளது,சிறுதானிய சமையல் பற்றிய சமையல்  குறிப்புகளுக்காகவே இயங்கும் சமூக ஊடக சேனல்கள் பிரபலம் அடைந்து வருகிறது, மேலும் சிறுதானிய வகைகளை வழங்கும் உணவகங்களும் துவக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் இயற்கை குடில் நடமாடும் சிறுதானிய வாகன உணவகம் தொடங்கப்பட்டுஉள்ளது. (மொபைல் சிறுதானிய கஃபே) குறிப்பிடத்தக்கது

ஸ்ரீ அன்னா தொடர்பான உற்பத்தி மற்றும் விற்பனையில்  500க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் (புத்தொழில்  நிறுவனங்கள்) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் (FPOs) சந்தையில் ஈடுபட்டு வருகின்றன. பதப்படுத்தப்பட்ட மற்றும் பைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மூலம் சிறுதானியங்கள் தற்போது சிறிய கடைகளுக்கும் கிராமப்புற  சந்தைகளுக்கும் சென்றடைந்துள்ளது ஸ்ரீ அன்னா பொருட்களுக்கு  சந்தையில் நல்ல விலை கிடைக்கும்போது   2.5 கோடி சிறு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். அதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரம் வலுவடையும்

Leave A Reply

Your email address will not be published.