Online News Portal on Agriculture

மரங்கள் இயற்கை பொக்கிஷங்கள்

துவரங்குறிச்சியில் விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா

0 31

 

தண்ணீரை பூமியில் தேடாதே, அதை வானத்திலிருந்து வரவழை’ என்பார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். மழையை வானத்திலிருந்து வரவழைப்பதற்கு இருக்கும் ஒரே ஒரே வழி மரங்களை வளர்ப்பதுதான். மரம் வளர்ப்பதால் மழை மேகங்கள் உருவாகின்றன. மரங்களின் வேர்கள் மூலம் மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. மரங்கள் மனிதனுக்கு மட்டுமல்ல, பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாக விளங்குவதை மரங்கள் தான். இந்திய மருத்துவ கவுன்சில்., 2019-ம் ஆண்டில் 17 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் இறந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது சூழல் மாசுபாடு குறைய மரங்கள் அவசியம் . பல்லுயிர் பெருக்கம் நடை பெற மரங்கள் அவசியம். எனவே மரங்கள் இயற்கை பொக்கிஷங்கள் என்றுதான் கருதவேண்டும் மேலும் விவசாயிகளும் தானியச் சாகுபடியோடு மரங்களையும் வளர்த்து வர வேண்டும். மரச் சாகுபடியும் ஒரு விவசாயம்தான். அதுவும் வருமானம் கொடுக்கும்’ என்கிறார் வேளாண் ஆலோசகர் முனைவர் கே சி சிவபாலன்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் உள்ள ஈஷா நர்சரியில் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மர கன்றுகள் நடும் விழா மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா அண்மையில் நடை பெற்றது.

 

இதில் பாரதிய ஜனதா கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா, திருச்சி ஸ்ரீ சரஸ்வதி கஃபே கௌரி சங்கர், மருங்காபுரி ஜமீன்தார் கிருஷ்ணவிஜயன் , துவரங்குறிச்சி சபரி நர்சரி குமார் மற்றும் தோழமை அமைப்புகளும் கலந்து விழாவை சிறப்பித்தனர்.

ஈஷா தன்னார்வ தொண்டர்களும், விவசாய பெருமக்களும் கலந்துகொண்டு மரங்களை நட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மர கன்றுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை திருச்சி ஈஷா நர்சரி பாலசுப்ரமணியன் காசிநாதன் சிறப்பாக செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.