இயற்கை வேளாண்மை செய்யும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உறுதி
உத்திரவாத சான்றளிப்புத் திட்டக் குழு விவசாயிகளுக்கான உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் உத்திரவாத சான்றளிப்பு திட்டத்தின் கீழ் (PKVY) 20 குழுக்களாக 463 விவசாயிகள் பதிவு செய்து கடந்த ஓர் ஆண்டாக உயிர்ம வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்து வருகின்றார்கள்.அவர்கள் பயன்பெறும் வகையிலும் அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கத்திலும் தஞ்சாவூர் மாவட்ட, விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை மற்றும் மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மையம் பெங்களுரூ இணைந்து இரண்டு தொகுதிகளாக உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி 11 குழுக்களுக்கு பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு.கா.அண்ணாதுரை, பி.எஸ்சி.பிஎல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மீதமுள்ள 9 குழுக்களுக்கு கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் சென்னை, விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு இணை இயக்குநர் (பொ) திருமதி.அக்ரி.எம்.ஜோதிலட்சுமி பி.எஸ்சி(விவ), அவர்கள் தலைமையிலும் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் உரையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இயற்கை வேளாண்மை தொடர்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் தஞ்சை மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாரம்பரிய நெல் விதைகளான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா போன்ற ரகங்களை மானிய விலையில் விநியோகித்தும் அவர்களுக்கு தேவையான இடுபொருட்களை மானிய விலையில் வழங்கியும் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை பெற்று வழங்குவதாகதனது சிறப்புரையில் உறுதி அளித்தார்
.
இப்பயிற்சிகளை தலைமையேற்று நடத்திய சென்னை, விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு இணை இயக்குநா; (பொ) திருமதி.அக்ரி.எம்.ஜோதிலட்சுமி பி.எஸ்சி(விவ), அவர்கள் உயிர்மச் சான்றளித் துறையின் திட்டங்கள் மற்றும் இயற்கை விவசாய முறையில் விளைந்த பொருட்களின் வணிக வாய்ப்புகள் குறித்தும் உயிர்ம விவசாயிகள் பெறும் வாய்ப்புச் சான்றிதழ் (ளுஉழிந ஊநசவகைiஉயவந) முக்கியத்தவம் குறித்தும் விபரமாக தெரிவித்தார்கள்.
தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) திருமதி.அக்ரி.வெ.சுஜாதா, பி.எஸ்சி(விவ) அவர்கள் உரையில் மாநில அரசின் திட்டங்கள் மற்றும் உயிர்ம வேளாண்மை விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் குறித்தும் இயற்கை வேளாண்மையில் உள்ள இடர்பாடுகள் மற்றும் தீர்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.தஞ்சாவூர் வேளாண்மை துணை இயக்குநர்(ம.தி) திருமதி.ச.மாலதி, பி.எஸ்சி(விவ) அவர்கள் உரையில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள்.இப்பயிற்சியினை நடத்திய மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மையம் பெங்களுரு தொழில் நுட்ப அலுவலர் திரு.அர்ஜுன்சிங், எம்.எஸ்சி அவர்கள் மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மையத்தின் நோக்கங்கள் மற்றும் இம்மையத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு பயிற்சிகள்;, திரவ உயிர் உர உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் பிற இயற்கை இடுபொருட்கள் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் தெளிவாக விளக்கினார்கள்.
சென்னை தமிழ்நாடு உயிர்மச் சான்றளிப்பு துறை, மதிப்பீட்டாளர், திருமதி. எம்.வானதி, எம்.எஸ்சி(விவ) , இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து விபரமாக தெரிவித்தார்கள். மேலும் உயிர்ம விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்புச் சான்றிதழில் உள்ள சின்னத்தை அவசியம் பயன்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்கள்.வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை நிலைய தலைவர் முனைவர் இரா.அருண்குமார், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்ட நிலைய தலைவர் முனைவர். பார்த்தீபன் (பொ), ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி முனைவர் தண்டபாணி, தேசிய இயற்கை வேளாண்மை பயிற்றுநர் முனைவர் சிவபாலன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் தொழில் நுட்ப உரையாற்றினார்கள்.
இப்பயிற்சியில் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து அதற்கு நிகரான இயற்கை இடுபொருட்கள் சுயமாக தயாரித்து தற்சார்பு வேளாண் முறைக்கு மாறுவதால் கிடைக்கப் பெறும் நன்மைகள் குறித்து விளக்கினார்கள்.இப்பயிற்சியின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்சார்பு அங்ககச் சான்றளிப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள சுமார் 1000 ஏக்கருக்கும் மேலான பரப்பில் இயற்கை வேளாண்மையை திறம்பட செய்யும் நோக்கத்தில் அவ்விவசாயிகளுக்கு பஞ்சகாவ்யா, பூச்சி விரட்டி, ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை பற்றி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் பங்குபெற்ற விவசாயிகள் ஜீவாமிர்தம் தயாரிக்க ஏதுவாக அதற்கு தேவையான இடுபொருட்களான நாட்டு வெல்லம், பாசிபயறு மாவு வழங்கியும் தயாரிப்பு முறைகள் குறித்தும் செயல்விளக்கம் விதைச் சான்று உதவி இயக்குநர் திரு.து.கோபாலகிருஷ்ணன், மற்றும் விதைச் சான்று அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. பயிற்சியின் இறுதியாக துறை அலுவலர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் ஐயப்பாடுகளுக்கு விளக்கமளித்ததுடள் மேற்கொண்டு தொடர்ச்சியாக கடைபிடிக்கப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் உயிர்மச் சான்று பெற்று வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் விவசாயிகளின் விதைப் பொருட்கள், இடுபொருட்கள், விதைச் சான்று மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறையினர் பாரம்பரிய விதைகள்இ இடுபொருட்கள் ஆகியவைகளை கொண்டு கண்காட்சி பயிற்சியாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இப்பயிற்சியினை தஞ்சாவூர் மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறையின் அனைத்து விதைச் சான்று அலுவலர்களும் மற்றும் அனைத்து விதை ஆய்வாளர்களும் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தனர் . இந்நிகழ்சியின் நிறைவாக விதைச் சான்று அலுவலர்கள் திருமதி.அக்ரி.சா.சங்கீதா, திரு.அரவிந்தன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.