பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகளை வழங்குகிறது வனத்துறை. இந்த திட்டத்தின் கீழ் மகாகனி, சவுக்கு, தேக்கு, நாவல் பெருநெல்லி, வேம்பு, புளி, புங்கன், மலைவேம்பு, சரக்கொன்றை, செம்மரம் மற்றும் முருங்கை போன்ற மரக்கன்றுகளின் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த கன்றுகள் விருப்பமுள்ள விவசாயிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
மரக்கன்றுகளை பெற பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, விவசாய நிலத்தின் சிட்டா நகல் ஒன்று, ஆதார் அட்டை நகல் ஒன்று ஆகிய ஆவணங்கள் அளித்து இலவசமாக நாற்றுகளை பெற்றுக் கொள்ளலாம். அந்தந்த மாவட்டத்தில் உள்ள வனத்துறை சமூக காடுகள் சரக அதிகாரிகளை தொடர்பு கொண்டால் மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.